Vitale மருத்துவ அட்டையினை அடையாள அட்டையுடன் இணைப்பது தொடர்பில் அரசு ஆலோசித்து வருகிறது.

சுகாதார கொடுப்பனவுகள் அல்லது காப்பீடுகளை பெற்றுக்கொள்வதில் மோசடி இடம்பெறுவதை தடுக்கும் நோக்கில் இந்த திட்டத்தை ஆலோசித்து வருகிறது. இந்த திட்டத்தை சுகாதார அமைச்சர் Gabriel Attal முன்வைத்துள்ளார். அதேவேளை இதற்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது.

மேற்படி இணைப்பினால், தனிநபர் ஒருவரின் சுகாதாரம் தொடர்பான ரகசியங்கள் பகிரப்படும் அபாயம் எழும் எனவும், இந்த இணைப்பு அவசியமில்லாதது எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இது முதல்கட்ட முயற்சிகளே எனவும், தொடர்ந்தும் இது தொடர்பாக ஆராயப்படும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.