ஓய்வூதியத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் விபரங்களை உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
மார்ச் 16 ஆம் திகதியில் இருந்து இதுவரை 2,579 இடங்களில் தீவைத்துள்ளதாகவும், மொத்தமாக 1,093 காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
316 பொது கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு IGPN அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.