la Courneuve காவல்நிலையத்தில் இருந்து ஜன்னல் வழியாக தப்பி ஓடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 28 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் குறித்த காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இரண்டாவது தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபர் ஜன்னல் வழியாக வெளியேறி, அங்கிருந்து கீழிறங்கி தப்பி ஓடியுள்ளார்.

கண்காணிப்பு காவல்துறையினர் குறித்த நபரை உடனடியாக தேடி கைது செய்தனர். திருட்டு வழக்கு ஒன்றில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.