ஓய்வூதிய சீர்திருத்த சர்ச்சைகள் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இன்று 10 ஆவது நாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்குள் பெருமளவில் முடக்கப்படவில்லை என்றபோதும், RER B உள்ளிட்ட சில சேவைகள் தடைப்பட்டுள்ளன.

✅ மெற்றோக்கள், பேருந்துகள், ட்ராம் சேவைகள் வழமை போல் இயங்கும்.

✅ RER A சேவைகள் சில தாமதங்களை சந்திக்கும் என்றபோதும், சேவைகள் தடையின்றி இயங்கும் என அறிய முடிகிறது.

⚠️ RER B இரண்டில் ஒரு சேவை மட்டும் இயங்கும். இரவு 10.45 மணிக்குப் பின்னர் தொடருந்துகள் இயக்கப்படாது.

⚠️ RER C மூன்றில் இரண்டு தடைப்படும்.

⚠️ RER D, ஐந்தில் மூன்று தடைப்படும்.

⚠️ RER E சேவைகள் மூன்றில் இரண்டு தடைப்படும்.

***

சர்வதேச சேவைகளும் தடைப்பட்டுள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்துகளே இயக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

****
⚠️ INOUI மற்றும் OUIGO சேவைகளில் மூன்றில் இரண்டு தடைப்படும்.

⚠️ Intercités சேவைகளில் ஐந்தில் மூன்று தடைப்படும். இரவு நேர சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

⚠️ TER சேவைகள் இரண்டில் ஒன்று தடைப்படும்.