ட்ராம் தொடருந்தில் வைத்து இளம் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெப்ரவரி 27 ஆம் திகதி இச்சம்பவம் பரிசின் புறநகர் பகுதியான La Courneuve (Saine-Saint-Denis) பகுதியில் இடம்பெற்றுள்ளது. T1 ட்ராம் ஒன்றில் பயணித்த 20 வயதுடைய இளம் பெண் ஒருவரை 35 வயதுடைய நபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டு La Courneuve காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடைய சூடான் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.