புதன்கிழமை இரவு Bondy (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இரவு 10.55 மணி அளவில் Avenue Jean-Moulin வீதியில் ஐந்தில் இருந்து ஏழு தடவைகள் துப்பாக்கி முழக்கம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இரு நபர்கள் காயமடைந்துள்ளனர். இருவரும் SAMU மருத்துவக்குழுவினரால் மீட்கப்பட்டு Jean-Verdier மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைகளை Bondy நகர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.