கடந்த வருடத்தில் பிரான்சில் 156 தொன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

முந்தைய 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகமாகும். 128 கிலோ போதைப்பொருட்கள் பிரான்சில் 2021 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில் மொத்தமாக 156.7 தொன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை, 37,510 பேர் போதைப்பொருட்கள் விற்பனை முகவர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், இது முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் அதிகம் எனவும் உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்