இன்று வியாழக்கிழமை பல்வேறு துறைசார்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பொது போக்குவரத்துக்கள், கல்வித்துறை, தூய்மைப் பணி, மற்றும் எரிபொருள் விநியோகம் போன்ற பல்வேறு துறைகள் முடக்கப்பட உள்ளன.
அதேவேளை, நண்பகலுக்கு பின்னர் தலைநகர் பரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் இடம்பெற உள்ளன. வன்முறைகள் நிகழாமல் தடுக்க காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் என மொத்தமாக 12,000 அதிகாரிகள் சீருடையுடனும், சிவில் உடையுடனும் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
இன்று இடம்பெற உள்ளது ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிரான 9 ஆவது நாள் வேலை நிறுத்தமாகும்.
பகல் 2 மணிக்கு Place de la Bastille பகுதியில் ஆரம்பமாகும் போராட்டம் மாலை 7 மணிக்கு Place de I’Opéra பகுதியில் சென்று நிறைவடையும் என தெரிவிக்கப்படுள்ளது.
போராட்டக்காரகள் Boulevard Beaumarchais, Boulevard des Filles-du-Calvaire, Boulevard du Temple, Place de la République, Boulevard Saint-Martin மற்றும் Boulevard Saint-Denis பகுதிகளூடாக பயணிக்க உள்ளனர்.