பரிசில் உள்ள சிறிய உணவகம் ஒன்றின் முன்பாக துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 ஆம் வட்டாரத்தின் Porte d'Orléans பகுதியில் உள்ள சிறிய துரித உணவகம் ஒன்றின் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இளம் நபர் ஒருவர் துரித உணவகத்தின் கதவருகில் நின்றிருந்தபோது ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அதிஷ்ட்டவசமாக இத்துப்பாக்கிச்சூட்டில் அவர் காயமடையவில்லை. அதையடுத்து மேலும் பலதடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். ஆயுததாரி தப்பி ஓடிய நிலையில், சில நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து 6.35 mm கலிபர் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.