ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. குறிப்பாக தலைநகர் பரிசில் பெரும் கலவரம் ஏற்பட்டது.

தலைநகர் பரிசில் போராட்டக்காரகள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். தேங்கியிருந்த குப்பைகளையும், குப்பைத் தொட்டிகளையும் வீதிகளுக்கு இழுத்து தீவைத்து எரித்தனர்.

பரிசில் 119,000 பேரும், நாடு முழுவதும் 1.089 மில்லியன் பேரும் போராட்டத்தில் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, தாம் 3.5 மில்லியன் பேர் போராட்டத்தில் பங்கேற்றதாக CGT தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.