பிரான்சின்  Auvergne-Rhône-Alpes மாகாணத்தில் உள்ள அலியே மாவட்டத்தின்  லா சப்பல் நகரில் (La Chapelle -Allier) நடந்த ஒரு வெடி விபத்தில் ஒருவர் கொல்லப்பட மூன்று ஜோந்தார்ம் வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஒரு நபரை நேற்று 13h00 மணியளவில் கைது செய்யச் சென்றிருந்த ஜோந்தார்மினர் அந்த வீட்டில் பெற்றோல் மணம் வீசுவதை உணர்ந்துள்ளனர். இருப்பினும் அந்த நபரைக் கைது செய்த வேளையில் அந்த வீட்டில் திடீரென பெரும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஜோந்தார்மினரால் கைது செய்யப்பட்ட நபர் கொல்லப்பட மூன்று ஜோந்தார்மினர் படுகாயமடைந்துள்ளனர்.
உள்துறை அமைச்சர் தனது அறிக்கையில் இந்த வெடிவிபத்தில் மொத்தமாக 7 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர் எனவும் மூவர் படுகாயடைந்துள்ளதாகவும் தெரிவித்து காயமடைந்த படையினரிற்கு ஆறுதலையும் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

இது திட்டமிடப்பட்ட தாக்குதலா அல்லது விபத்தா என்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்படட்டுள்ளன.