நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பரிசில் உள்ள மூன்று துரித உணவங்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, Place de la République பகுதியில் இருந்து ஆர்ப்பாட்டக்குழுவினர் முன்னேறிச் சென்றனர். 3.22 மணி அளவில் Boulevard Saint-Denis பகுதியில் உள்ள McDonald’s உணவகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர் 4.30 மணி அளவில் மற்றுமொரு McDonald’s உணவகமும், KFC உணவகமும் தாக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் தலையிட்டு இந்த தாக்குதல்களை தடுத்தனர். அதன்போது மொத்தமாக 26 பேரினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தலைநகர் பரிசில் நேற்றைய தினம் 400,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக CGT தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. ஆனால் அவர்கள் 57,000 பேர் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று காலை முதல் 4,000 காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். மொத்தமாக 2,200 பேர் சோதனையிடப்பட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.