இவ்வருடம் முழுவதும் இல் து பிரான்ஸ் மக்கள் போக்குவரத்துச் சிரமங்களை சந்திக்க உள்ளதாக மாகாண முதல்வர் Valérie Pécresse அறிவித்துள்ளார்.
பல திருத்தப்பணிகள் இவ்வருடத்தில் இடம்பெற உள்ளதால் நீண்ட நாட்களுக்கு போக்குரவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும் எனவும், தொடருந்துகளுக்கு மாற்றீடாக பேருந்துகள் ஏற்படுத்தி தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் பரிசில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற உள்ள நிலையில், அதனை இலக்கு வைத்து பல்வேறு போக்குவரத்து சேவைகள் திருத்தி அமைக்கப்பட உள்ளன. பல புதிய நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. அதையடுத்து இரவு நேரங்களில் - குறிப்பாக இரவு 10 மணியில் இருந்து மறுநாள் காலை வரை போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என Valérie Pécresse இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.