Livret A சேமிப்பு கணக்கில் கடந்த வருடம் இரு தடவைகள் வட்டி வீதம் அதிகரித்திருந்ததைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் வட்டி வீதம் அதிகரிக்கப்பட உள்ளதாக பொருளாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
தற்போது 2 வீதமாக உள்ள வட்டி, வரும் பெப்ரவரி 1 ஆம் திகதியுடன் 3 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. சென்ற வருட ஆரம்பத்தில் 0.5% சதவீத வட்டியுடன் இருந்த இந்த சேமிப்பு கணக்கு, பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி 1% சதவீதமாக அதிகரித்திருந்தது.
அதன் பின்னர் ஓகஸ்ட் 1 ஆம் திகதி வட்டி 2% சதவீதமாக அதிகரித்திருந்தது.
இந்நிலையிலேயே தற்போது 3 சதவீதமாக வட்டி அதிகரிக்கப்பட உள்ளதாக பொருளாதார அமைச்சர் Bruno Le Maire அறிவித்துள்ளார்.
கடந்த ஒரு ஆண்டில் பிரெஞ்சு பணவீக்கம் 5.9% சதவீதத்தால் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.