Trottinettes என அழைக்கப்படும் மின்சார ஸ்கூட்டர்களினால் ஏற்படும் விபத்து அதிகரித்துள்ளதாக பரிஸ் காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் (2022) பரிசில் 408 விபத்துக்கள் இந்த மின்சார ஸ்கூட்டர் காரணமாக இடம்பெற்றுள்ளது. இவ்விபத்துக்களில் 459 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு மூவர் சென்ற ஆண்டில் பலியாகியும் உள்ளனர்.
முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த விபத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் 318 விபத்துக்களும், 2020 ஆம் ஆண்டில் 294 விபத்துக்களும் பரிசில் பதிவாகியிருந்தன.
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு 39 சதவீதத்தால் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.