வருடம் தோறும் பரிசில் இடம்பெறும் மிக பிரம்மாண்டமான கண்காட்சியான Foire de Paris நிகழ்வு இவ்வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

அனைத்து வித வீட்டு உபகரண பொருட்கள், தளபாடங்களில் இருந்து அத்தியாவசியமான பொருட்கள் விற்பனை செய்யும் இந்த விற்பனைத் திருவிழா இவ்வருடம் ஏப்ரல் 27 ஆம் திகதி பரிசில் ஆரம்பமாகிறது. 12 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று மே 8 ஆம் திகதியுடன் நிறைவடையும்.

இந்த கண்காட்சியின் போது 1,250 நிறுவனங்களைச் (marques) சேர்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

119 ஆண்டாக இடம்பெறும் இவ்வருட கண்காட்சி தினமும் இரவு 10 மணிவரை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்காட்சிக்கான நுழைவுச் சிட்டைகள் Foire de Paris இணையத்தளத்தில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன