ஓய்வூதிய மறுசீரமைப்பை எதிர்த்துவியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள.

பெரும் தொழிற்சங்கப் போராட்டங்கள்
காரணமாக நாடெங்கும் எரிபொருள்
விநியோகங்கள் தடைப்படலாம்
என்று கூறப்படுகிறது.



மிகப் பெரிய தொழிற்சங்கங்களில்

ஒன்றாகிய தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் (La Confédération générale du travail-CGT) பெற்றோலியத்

துறைப் பகுதித் தொழிலாளர்களும்( la CGT de la branche pétrole) எதிர்வரும் வியாழனன்று ஆரம்பமாகவுள்ள

-24 மணிநேர-வேலை நிறுத்தப் போராட்டத்தில்
இணைந்துகொள்ளவுள்ளனர்.

தொடர்ந்து ஜனவரி 26 ஆம் திகதி 48 மணிநரப் பணிப் பகிஷ்கரிப்பும் பெப்ரவரி 6 ஆம் திகதி 72 மணிநேரப்

பணிப் புறக்கணிப்பும் இடம்பெறும்
என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

19ஆம் திகதி ஆரம்ப நாள் வேலை நிறுத்தம் தேவைப்பட்டால் மேலும்
சில தினங்கள் நீடிக்கலாம் என்று
பெற்றோலியத் தொழிற்சங்க வட்டாரங்கள் தகவல்
வெளியிட்டுள்ளன. அவ்வாறு போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் பிரதான எரிபொருள் சேமிப்பு மையங்களில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கின்ற அளவு குறைக்கப்படும் என்றும் கப்பல்கள் மூலம் எரிபொருள் இறக்குகின்ற பணிகளும் முடக்கப்படும் என்று டோடல்எனர்ஜி நிறுவனத்தின் (TotalEnergies) பொற்றோலிய ஊழியர் தொழிற்சங்க இணைப்பாளர் தெரிவித்திருக்கிறார்.



மக்ரோன் அரசின் ஓய்வூதிய மறுசீரமைப்புத் திட்டத்தை எதிர்த்து - அதைச் சட்டமாக்குவதைத் தடுப்பதற்காக-தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் ஆரம்பிக்கின்ற நடவடிக்கை 1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொழிலாளர்கள் ஓரணியாக
நடத்துகின்ற மிகப் பெரிய தொழிற்சங்க நடவடிக்கையாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

நாட்டில் உள்ள பல்வேறு துறைகளை உள்ளடக்கிய எட்டுத் தொழிற்சங்கங்கள் (CFDT, CGT, FO, CFE-CGC, Unsa, Solidaires, FSU) கூட்டாக எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்குகின்றன.



1995 இன் இறுதியில் ஜக் சிராக் அதிபராகிய சமயத்தில் நாடு ஒரு பெரும் தொழிற்சங்கப் போராட்டத்தை எதிர்கொண்டது. ஓய்வூதியம் மற்றும் சமூகநல உதவித் திட்டங்களில் பல மாற்றங்களைச் செய்வதற்காக அப்போதைய பிரதமர் அலைன் ஜூப்பேயினால் (Alain Juppé)

முன்வைக்கப்பட்ட திட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களால் நாடு சுமார் ஒருமாத காலம் முற்றாக முடங்கியது.



"ஜூப்பே திட்டம்"(plan Juppé) என அழைக்கப்பட்ட அந்தத் திட்டத்துக்கு அச்சமயத்தில் நாடு முழுவதும்

தொழிலாளர் மத்தியில் எழுந்த ஒன்று
திரண்ட எதிர்ப்புணர்வை ஒத்த ஒரு நிலைமையே தற்சமயம் நாட்டில் காணப்படுகிறது என்று அவதானிகள்குறிப்பிடுகின்றனர்.



பணவீக்கம், வாழ்க்கைச் செலவு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சமூகத்தினரிடையே உத்தேச ஓய்வூதியச் சீர்திருத்தம் பெரும் சமூகக் கிளர்ச்சிகளை ஏற்படுத்தலாம் என்று

உள்நாட்டு உளவுச் சேவை அரச உயர் மட்டத்தை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.