உதைபந்தாட்ட வீரர் ஒருவர் 100 கிலோ கொக்கைன் போதைப்பொருளுடன் சாள்-து-கோல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Jean-Manuel Nedra எனும் வீரர் ஒருவரே கடந்த வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வீரர் பிரான்சுக்கு சொந்தமான Martinique
தீவைச் சேர்ந்தவர் எனவும், l'Aiglon du Lamentin அணிக்காக விளையாடி வருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் தனது காதலியுடன் சாள்-து-கோல் விமான நிலையத்துக்கு வந்த Jean-Manuel Nedra இன் சூட்கேசில் 100 கிலோ கொக்கைன் போதைப்பொருள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.