வரும் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட CGT தொழிற்சங்கம் தன் ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தை அடுத்து RATP நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து சேவைகள் தடைப்பட உள்ளன. வியாழக்கிழமை மாலை 7.30 மணியில் இருந்து சனிக்கிழமை காலை 7 மணி வரை இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பணவீக்கம் காரணமாக செலவீனங்களை கருத்தில் கொண்டு ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலை நிறுத்தத்தை அடுத்து வெள்ளிக்கிழமை பேருந்து சேவைகள் தடைப்பட உள்ளதாக அறிய முடிகிறது. தடைப்படும் சேவைகள் குறித்த விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது