ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ‘புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு’ எதிராக மீண்டும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஜனவரி 31 ஆம் திகதி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுவரை CGT, FO, UNSA மற்றும் CFE-CGC ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக உறுதி செய்துள்ளன.

தற்போது 62 ஆக உள்ள ஓய்வூதிய வயதினை 65 ஆக உயர்த்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் திட்டமிட்டுள்ளார். இதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் வரும் நிலையில், இந்த ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக முன்னதாக கடந்த 19 ஆம் திகதி வேலை நிறுத்தமும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றிருந்தது. அதையடுத்து மீண்டும் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் போக்குவரத்து தடைப்படும் என அறிய முடிகிறது என்றபோதும், தடைப்படும் சேவைகள் குறித்த விரிவான தகவல்கள் பின்னரே அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது