யூத மதத்துக்கு எதிரான தாக்குதல்கள் பரிசில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இவ்வார திங்கட்கிழமை பரிசின் சில இடங்களில் யூத மதத்துக்கு எதிரான குறியீடுகள் (Tags) காணப்பட்டுள்ளது.
பரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு மூடப்பட்ட கடைகளின் கதவுகளில் வணப்பூச்சினால் அவை வரையப்பட்டுள்ளன. யூத மதத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவனால் இவை முதலில் கண்டறியப்பட்டு, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மிக விரைவாக அந்த குறியீடுகள் அழிக்கப்பட்டன. அத்தோடு மேற்படி செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி யூத மதத்துக்கு எதிரான தாக்குகளுக்கு பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அத்தோடு ‘கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய குற்றம்’ என போக்குவரத்துத் துறை அமைச்சர் Clément Beaune தெரிவித்துள்ளார்.