கடந்த 24 மணிநேரத்தில் கொவிட் 19 தொற்றினால் 134 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் 163,949 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 134,314 பேர் மருத்துவமனைகளிலும், 29,635 பேர் முதியோர் காப்பகங்களிலும் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் 17,639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 1,016 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, பிரான்சில் கொவிட் 19 பரவல் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் 1,027 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.