Juvisy-sur-Orge நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் மகிழுந்து ஒன்றை தீ வைத்து எரித்த நிலையில், அவரது உடலிலும் தீ பரவியுள்ளது. தீயில் சிக்கிய நபரை காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.
வியாழக்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் இடைப்பட்ட இரவில், Juvisy-sur-Orge (Essonne) நகர காவல்நிலையத்துக்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 47 வயதுடைய ஒருவர் நள்ளிரவு 2 மணி அளவில் காவல்நிலைய தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மகிழுந்து ஒன்றை தீ வைத்து எரித்துள்ளார்.
அப்போது துரஷிட்டவசமாக அவரது கால்சட்டையில் தீப்பற்றியுள்ளது.
பலத்த சத்தமாக குரல் எழுப்பி கத்திய அவரை காவல்துறையினர் விரைந்து சென்று தீயணைப்பான் மூலம் தீயை அணைத்து அவரை காப்பாற்றினர்.
தீ அணைக்கப்பட்டதன் பின்னர் அவர் காவல்துறை அதிகாரிகளை தாக்க முற்பட்டுள்ளார். அதையடுத்து காவல்துறையினர் மின்சாரத் துப்பாக்கியானால் சுட்டு அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.