ஜனவரி 31 ஆம் திகதி பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 87,000 பேர் கலந்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து இரண்டாவது தடவையாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பரிசில் சில இடங்களில் பலத்த வன்முறை வெடித்தது. காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே தாக்குதல்கள் இடம்பெற்றன.
ஆர்ப்பாட்டத்தில் தாம் 500,000 பேர் கலந்துகொண்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் மொத்தமாக 87,000 பேர் இருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
அதேவேளை, பரிசில் மோதலில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது