பரிசில் உள்ள Montparnasse தொடருந்து நிலையத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தொடருந்து நிலையத்தில் கடமையில் ஈடுபடும் காவல்துறையினர் சந்தேகத்துக்கு இடமான இரு நபர்களை சோதனையிட்டதில், அவர்களது பைகளில் சில தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்துள்ளன. குறிப்பாக சிறிய ரக வாயு குடுவைகள் அவர்களிடம் இருந்துள்ளன. வெடிக்க வைப்பதற்குரிய இயந்திரங்கள் எதுவும் அவர்களிடத்தில் இல்லை என்றபோதும், அது ஆபத்தான பொருட்கள் என்பதால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்கள் இருவரும் பயங்கரவாத சிந்தனை கொண்டிருந்ததாகவும், வெடிப்பு தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளும் முனைப்புடன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் 51 மற்றும் 29 வயதுடையவர்களாவர்.

இருவரும் கைது செய்யப்படும் போது, ‘சுற்றி இருப்பவற்றை வெடிக்கச் செய்ய வேண்டும்’ என கோஷமிட்டதாக அறிய முடிகிறது. கைதான இருவரில் ஒருவர் பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர் எனவும், இரண்டாமவர் லிபியாவைச் சேர்ந்தவர் எனவும் அறிய முடிகிறது.