அரசு வழங்கி வரும் எரிபொருட்களுக்கான விலைக்கழிவினை இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது எரிபொருட்களுக்கான விலையில் பத்து சதத்தினை அரசு மானியமாக வழங்கி வருகிறது. இந்த மானியமானது இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. புதிய வருடத்தில் இருந்து எரிபொருட்களின் விலை 10 சதங்களினால் அதிகரிக்கப்பட உள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் முதன்முறையாக எரிபொருட்களின் விலையில் 30 சதங்களை மானியமாக அரசு வழங்கியது. பொன்னர், அது 20 சதங்களாக குறைக்கப்பட்டு தற்போது 10 சதங்களாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இவ்வருட இறுதியுடன் மானியம் நிறுத்தப்பட உள்ளதாக அறிய முடிகிறது.