நாளை இரவு நடக்க இருக்கும் பிரான்ஸ் - மொரோக்கோ அரையிறுதிப் போட்டியின் பின்னர் பெரும் கலவரம் ஏற்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடக்குவதற்காக காவற்துறையினர் மற்றும் ஜோந்தார்மினர் என பத்தாயிரம் வீரர்களை உள்துறை அமைச்சகம் களமிறக்கி உள்ளது. 
இதில் 5.000 பேர் இல்-து-பிரான்சில் மட்டும் களமிறக்கப்பட்டுள்ளனர். சோம்ப்ஸ் எலிசேப் பகுதியை மூடுவதற்கு மாவட்ட ஆணையம் உத்தேசித்திருந்தாலும், கலவரமும் வாகனங்களை எரிப்பதும் மிகஅதிகமாக நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இவற்றைத் தடுப்பதற்காகவே மேலதிகப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்