கிருஸ்மஸ் தினத்துக்கு முந்தைய இரவில் பரிஸ் புறநகர் பலவற்றில் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Yvelines மாவட்டத்தில் உள்ள Vésinet மற்றும் La Celle-Saint-Cloud ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு வீடுகளுக்குள் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். அங்குள்ள சில கடைகளுக்குள் நுழைந்தும் கொள்ளையிட்டுள்ளனர்.

நகைகள், இலத்திரணியல் பொருட்கள் மற்றும் பணம் ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளன. சிகரெட் பெட்டிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் Vésinet நகரில் வைத்து ஐவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் திருடப்பட்ட நகைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது