ஒரே இரவில் மூன்று வீடுகளில் திருடிய இருவரினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் 16 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது. சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் Charenton-le-Pont (Val-de-Marne) நகரில் கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளது. திருடன் ஒருவன் 16 வயதுடைய சிறுவனை அழைத்துக்கொண்டு அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருடியுள்ளான். அதிகாலை 2 மணி அளவில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த இருவரும், சோஃபா இருக்கையில் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் இருந்து தொலைபேசியினை திருடியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து சென்று, 3 மணி அளவில் மற்றுமொரு வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு 62 வயதுடைய ஒருவரிடம் இருந்து தொலைபேசி மற்றும் மடிக்கணனி ஆகியவற்றை திருடியுள்ளனர்.
அதன்பின்னர், மற்றுமொரு வீட்டுக்குள் அதிகாலை 5 மணி அளவில் நுழைந்து பெண் ஒருவரின் கைப்பையை திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இந்த மூன்று கொள்ளைகளைகளிலும் ஈடுபட்ட இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடச் சென்ற வீடு ஒன்றில் திருடன் ஒருவன் தனது காலணியை விட்டுச் சென்றுள்ளதை அடுத்தே, காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.