பிரான்சின் பிரபல எரிவாயு விற்பனையாளர்களான Engie நிறுவனத்துக்கு எரிவாயு வழங்குவதை இரஷ்யா நிறுத்த உள்ளதாக அறிய முடிகிறது.

இரஷ்யாவை தலைமையாக கொண்டு இயங்கும் எரிவாயு விற்பன்னர்களான Gazprom நிறுவனம் இந்த முடிவை அறிவித்துள்ளது. ஜூலை மாதத்துக்கான எரிவாயு கட்டணத்தை Engie நிறுவனம் செலுத்தவில்லை என தெரிவித்து, நாளை செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகத்தை நிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரஷ்யா-உக்ரைன் யுத்தம் ஆரம்பித்ததன் பின்னர், எரிவாயுவுக்கான கட்டணத்தை, குறித்த திகதிக்குள் செலுத்தாத எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விநியோகத்தை நிறுத்தும்படி இரஷ்ய நிறுவனங்களுக்கு அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புட்டின் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இரஷ்யா-உக்ரைன் யுத்தத்ம் ஆரம்பித்ததன் பின்னர் Engie நிறுவனத்துக்கு எரிவாயு வழங்குவதை இரஷ்யா மட்டுப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.