14 ஆம் இலக்க மெற்றோ சேவை போன்று, நான்காம் இலக்க மெற்றோவும் சாரதி இல்லாமல் தானியங்கி முறையில் பயணிக்க உள்ளது.
வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த சாரதியற்ற தானியங்கி முறையிலான தொடருந்து இயக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக நான்கு தொடருந்துகள் மட்டுமே நாள் ஒன்றில் இயக்கப்பட உள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குள் 4 ஆம் இலக்க மெற்றோ சேவைகள் அனைத்தும் தானியங்கி முறைக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்காம் இலக்க மெற்றோவில் நாள் ஒன்றுக்கு 52 சேவைகள் இயக்கப்படுகிறது. இவற்றில் நான்கு தொடருந்துகள் கடந்த ஜூன் மாதம் முதல் பரீட்சாத்தமாக தானியங்கி முறையில் இயக்க பரிசோதிக்கப்பட்டு வந்தது. அதையடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் நான்கு தொடருந்துகள் தானியங்கி முறையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசில் கடந்த 17 வருடங்களாக 14 ஆம் இலக்க மெற்றோ தானியங்கி முறையில் இயங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.