நவிகோ பயண அட்டை €100 யூரோக்களாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

வரும் 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நவிகோ பயண அட்டை விலை அதிகரிப்பை சந்திக்கும் என இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட புறக்காரணிகள் இந்த கட்டண அதிகரிப்பில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், 2023 ஆம் ஆண்டில் மேலதிகமாக €750 மில்லியன் வருமானத்தை ஈட்டவேண்டிய நிலமைக்கு Île-de-France Mobilités நிறுவனம் தள்ளப்படும் எனவும் Valérie Pécresse தெரிவித்துள்ளார்.

இந்த வருவாய் அதிகரிப்பை ஏற்படுத்த தற்போது €75.20 யூரோக்களாக உள்ள நவிகோ அட்டையின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நவிகோ அட்டையானது அதிகபட்சமாக €100 யூரோக்களாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.