18 வயதுக்குட்பட்டவர்கள் சுய சேவை மின்சார ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய லியோன் நகராட்சி முடிவு செய்துள்ளது.நகரத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆபரேட்டர்கள், டாட் மற்றும் டயர், தங்கள் பயனர்கள் சட்டப்பூர்வ வயதுடையவர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை இப்போது உள்ளது தெரிவித்துள்ளனர்.

QR குறியீட்டை ஸ்கேன் செய்ய உங்கள் ஐடியின் புகைப்படத்தை எடுக்க வேண்டும்.விண்ணப்பங்களுக்கு ஒரு ஆவணமாக, அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமத்தை அனுமதிக்கின்றன.

பல மாதங்கள் கலந்துரையாடலுக்கு பின்னரே நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக மொபிலிட்டிக்கு பொறுப்பான துணை மேயர் Valentin Lungenstras கூறினார். டாட்டின் கூற்றுப்படி, அவர்களது ஸ்கூட்டர்கள் ஏற்கனவே 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளன,

ஆகஸ்ட் மாதம், ஆம்புலன்ஸ் மோதியதில், ஸ்கூட்டரில் சவாரி செய்த லியோனில் இரண்டு சிறார்கள் கொல்லப்பட்டமையை அடுத்து எழுந்த பெற்றோர்,சமூக ஆர்வலர்களின் முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.