livret A சேமிப்புக்கணக்கின் வட்டி வீதம் அதிகரித்ததை அடுத்து, குறித்த கணக்கில் பிரெஞ்சு மக்கள் பலர் பணத்தினை முதலிடத்தொடங்கியுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதத்தின் முடிவில் இந்த வங்கிக்கணக்கின் நிலுவை 4.49 பில்லியன் யூரோக்களாக உள்ளது. வங்கிக்கணக்கில் இருந்து மீளப்பெறப்பட்ட பணத்தொகையை கழித்து இந்த நிலுவை கணக்கிடப்பட்டுள்ளதாக (dépôts moins retraits) தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டின் பின்னர் இந்த வங்கிக்கணக்கில் நிலுவையில் உள்ள அதிகபட்ச பணத்தொகை இதுவாகும்.
livret A சேமிப்புக் கணக்கின் வட்டி வீதம் இவ்வருட ஆரம்பத்தில் 0.5% வீதத்தில் இருந்து 1% வீதமாக அதிகரித்திருந்தது. பின்னர், கடந்த ஓகஸ்ட் 1 ஆம் திகதி வட்டி வீதம் மீண்டும் அதிகரித்து 2% வீதமாக உயர்வடைந்திருந்தது.
அதையடுத்து பிரெஞ்சு மக்கள் பெருமளவில் பணத்தினை வங்கிகளில் வைப்பிலிடத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.