14 ஆம் இலக்க மெற்றோ சேவையில் சில புதிய நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது நிலையம் ஒன்றுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பரிசின் தெற்கு புறநகரான Chevilly Larue நகரில் அமைக்கப்பட்டு வரும் நிலையம் ஒன்றுக்கே பெயர் சூட்டப்பட்டதாக Île-de-France Mobilités நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய நிலையத்துக்கு "Marché International - Porte de Thiais" என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நிலையத்துக்கு, தங்களது நகரத்தின் பெயரான Thiais எனும் பெயர் வரும்படியாக பல்வேறு பெயர்களை உள்ளூர் வாசிகள் பரிந்துரைத்திருந்தனர். அவர்களின் பரிந்துரைகளை ஏற்ற Île-de-France Mobilités நிறுவனம், மேற்டி பெயரினை சூட்டியுள்ளது.
குறித்த நிலையமானது வரும் 2024 ஆம் ஆண்டு இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.