தொடருந்து தண்டவாளத்தில் நபர் ஒருவர் விழுந்து பலியாகியுள்ளார். அதையடுத்து போக்குவரத்து தடைப்பட்டது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயது குறிப்பிடப்படாத நபர் ஒருவர் தண்டவாளத்தில் விழுந்து, தொடருந்துக்குள் சிக்கியுள்ளார். Roisny-sous-Bois மற்றும் Val-de-Fontenay நிலையங்களுக்கு இடையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு, நபரை காப்பாற்ற முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை. குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
அதையடுத்து, RER E மற்றும் ligne P தொடருந்துகள் தடைப்பட்டன. இரவு முழுவதும் தடை நீடித்ததுடன், இன்று புதன்கிழமை காலையும் போக்குவரத்து மேற்குறித்த காரணத்தினால் தடைப்பட்டது.
இன்று காலை 9 மணி அளவில் போக்குவரத்து சீரடைந்ததாக SNCF அறிவித்துள்ளது.