பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த அகதிகள் பலர் இன்று காலை வெளியேற்றப்பட்டனர்.
19 ஆம் வட்டாரத்தின் square de la Marseillaise பகுதியில் (Porte de Pantin அருகே) கடந்த பல மாதங்களாக கூடாரங்கள் அமைத்து அகதிகள் பலர் தங்கியிருந்தனர். அவர்கள் சுகதாரமற்ற முறையில் தங்கியிருந்ததை அடுத்து, இன்று காலை அங்கு வந்த அதிகாரிகள் அங்கிருந்து அகதிகளை வெளியேற்றினர். பேருந்தில் ஏற்றி அவர்களை இல் து பிரான்சின் பல பகுதிகளில் உள்ள தங்குமிடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
மொத்தமாக 326 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட ஆரம்பம் முதல் இதுபோன்ற பல வெளியேற்றங்கள் பரிசில் இடம்பெற்றுள்ளன. இவ்வருடத்தில் மட்டும் இதுவரை 3,212 அகதிகள் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.