எரிபொருட்கள் மீது அரசு வழங்கு வந்த விலைக்கழிவு இன்று முதல் மேலும் அதிகரிக்கப்படுகிறது. இரண்டு மாத காலத்துக்கு இந்த புதிய விலைக்குறைப்பு நடைமுறையில் இருக்கும்..
இன்று செப்டம்பர் 1 ஆம் திகதி முதல், பெற்றோல் மற்றும் டீசலுக்கு 30 சதம் விலைக்கழிவு கொண்டுவரப்படுகிறது. எரிபொருளின் விலையில் இருந்து இந்த 30 சதம் விலை குறைக்கப்படும். இன்று செப்டம்பர் 1 ஆம் திகதியில் இருந்து வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான இரண்டு மாதங்கள் இந்த விலைக்கழிவு நடைமுறையில் இருக்கும்.
கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் எரிபொருளுக்கு அரசு 18 சதங்கள் விலைக்குறைப்பு செய்திருந்தது. ஐந்து மாதங்களின் பின்னர் மீண்டும் இன்று விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேவேளை, நவம்பர் 1 ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்த விலை குறைப்பு 30 சதத்தில் இருந்து 10 சதமாக மட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது