பிரான்சுக்கு தேவையான எரிவாயு கிடைப்பதில் தொடர்ச்சியாக பல சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், வீடுகளுக்கு எரிவாயு விநியோகிப்பதில் தடை எழலாம் என மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த அச்சத்துக்கும், குழப்பங்களுக்கும் பிரதமர் Elisabeth Borne நேற்று பதிலளித்துள்ளார். “மக்களுக்கான எரிவாயு விநியோகத்தை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை. அதிகளவில் எரிவாயுவை பயன்படுத்தும் சில பெரும் நிறுவனங்களுக்கு தடை ஏற்படலாம். ஆனால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான எரிவாயு ஒருபோதும் தடைப்படாது!” என பிரதமர் தெரிவித்தார்.
நேற்று ஓகஸ்ட் 30 ஆம் திகதி, தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் Elisabeth Borne இதனை தெரிவித்தார்.
அதேவேளை, மின்சாரத்தடை சிலவேளைகளில் ஏற்படலாம் என தெரிவித்தார். “நாங்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். சிலவேளைகளில் மின்சாரத் தடை ஏற்படலாம். மின்சார உற்பத்திக்கு தேவையான எரிவாயு கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால் மின்சாரத்தடை ஏற்படலாம்!” எனவும் பிரதமர் தெரிவித்தார்.
***
எரிவாயு மற்றும் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தும் படி பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.