காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவரை, காவல்துறையினர் துப்பாக்கியினால் சுட்டுப் பிடித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை Saint-Quentin (Aisne) நகரில் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, காலை 6.25 மணி அளவில் ஆயுததாரி ஒருவன் திடீரென அதிகாரிகளை நோக்கி துப்பாகியால் சுட்டுள்ளார். துப்பாக்கியால் சுடும் போது ‘அல்லா அக்பர்’ என கோஷமிட்டுள்ளார்.
உடனடியாக காவல்துறையினர், ஆயுததாரியை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஆயுதாரி, Amiens (Somme) நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேற்படி துப்பாக்கிச்சூட்டில் காவல்துறையினர் காயமடையவில்லை எனவும், ஆயுததாரியின் பின்னணியில் இஸ்லாமிய பயங்கரவாதம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது