590 மில்லியன் யூரோக்கள் செலவில் புதிய நெடுந்தூர தொடர்ந்துகளை வாங்குவதற்கு SNCF தொடர்ந்து நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.
தொடருந்துகளை தயாரிக்கும் Alstom நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தத்தை SNCF நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஓகஸ்ட் 18 ஆம் திகதி வியாழக்கிழமை இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மொத்தமாக 15 புதிய தொடருந்துகளுக்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
TGV என அழைக்கப்படும் நெடுந்தூர சேவைகளுக்கன தொடருந்துகளை வாங்குவற்காகவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
“2030 ஆம் ஆண்டு அளவில்TGV சேவைகள் ஐரோப்பாவில் எங்கு செல்வற்கு திட்டமிட்டுள்ளோம்” என SNCF நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) Christophe Fanichet தெரிவித்தார்.