இரண்டு வயது குழந்தை ஒன்று, ஐந்தாவது தளத்தில் இருந்து விழுந்து பலியாகியுள்ளது. 93 ஆம் மாவட்டத்தின் Villepinte நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று ஓகஸ்ட் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் ஐந்தாவது தளத்தில் இருந்து குழந்தை ஒன்று கீழே விழுந்துள்ளது. உடனடியாக மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. குழந்தை இறந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை விழுந்தமைக்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.