20 பேர் வரையானவர்கள் இணைந்து குழு மோதல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். Saint-Denis நகரில் இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இரண்டு குழுக்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளது. கட்டைகள் இரும்பு கம்பிகள் போன்றவற்றைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இந்த மோதல் இவ்வார திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் தலையிட்டு மோதலைத் தடுத்தனர். 6 பேரினை கைதும் செய்தனர்.
ட்ராம் நிறுத்தம் ஒன்றுக்கு அருகே இந்த மோத்தல் இடம்பெற்றுள்ளது. அங்கு நின்றிருந்த பலர் மேற்படி மோதலை தொலைபேசியில் படம் பிடித்தனர். சமூகவலைத்தளத்தில் பல காணொளிகள் பரவி வருகிறது.
மோதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.