Pôle emploi நிறுவனம் இன்று சில புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது.
வேலையில்லாதோருக்கான மிக பொருத்தமான வேலைகளை பரிந்துரைக்கும் நிறுவனமான Pôle emploi, இவ்வருடத்தின் இரண்டாவது காலாண்டில் கணிசமானோருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் A பிரிவில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 0.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சியின் பின்னர் தற்போது வேலை தேடுவோரின் எண்ணிக்கை 3,165,500 பேராக (A பிரிவில்) வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேவேளை, மொத்தமாக (பிரிவு A, B மற்றும் C) 5,152,100 பேர் Pôle emploi நிறுவனத்தில் வேலைக்காக தங்களது பெயரினை பதிவு செய்துள்ளனர் எனவும், அவர்களில் 716,300 பேர் உண்மையில் வேலையினை பெற எந்த வித முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனவும், அவர்கள் உடனடியாக தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.