பிரான்சில் மின்சாரக்கட்டணம் இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வருட ‘குளிர்காலத்தின்’ போது இந்த அதிகபட்ச விலை அதிகரிக்கப்படும் என பிரான்சின் எரிசக்தி ஆணையம் (Commission de régulation de l'énergie) அறிவித்துள்ளது. ‘குறைந்தது ஒரு சில வாரங்களுக்கு இந்த அதிகபட்ச விலை நடைமுறையில் இருக்கும்!’ என எரிசக்தி ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
துல்லியமான விலை விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றபோதும், ‘பிரெஞ்சு மக்கள் இதுவரை சந்திக்காத விலை அதிகரிப்பை சந்திக்க் உள்ளனர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இரஷ்ய-உக்ரைன் யுத்தத்தினால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு உலைகளை இயக்குவதில் சிக்கல் எழும். இதனை சரிசெய்வதற்காகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட உள்ளதாக எரிசக்தி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.