வீடற்ற ஒருவர் மீது தாக்குதல் நடத்திய காரணத்துக்காக 93 ஆம் மாவட்டத்தைச் சேர்ந்த இரு காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 14 ஆம் திகதி Le Bourget (Seine-Saint-Denis) நகரில் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், வீதியில் நின்றிருந்த வீடற்றவர் ஒருவரை எக்காரணமும் இல்லாமல் தாக்கியுள்ளனர். காவல்துறையினர் வாகனத்தில் இருந்த நிலையில் வீடற்றவர் மீது கண்ணீர்புகை ஸ்பிரேய்ரை அடித்துள்ளனர்.

இச்சம்பவத்தை ஒருவர் படம் பிடித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதையடுத்து மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

காவல்துறையினரை கண்காணிக்கும் அதிகாரிகளான IGPN அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு அவ்விரு அதிகாரிகளையும் கைது செய்தனர்.

இந்நிலையில், குறித்த இரு அதிகாரிகளும் நேற்று செவ்வாய்க்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.