Fontenay-sous-Bois நகரில் வசித்த 250 பேர் இன்று வியாழக்கிழமை காலை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மிக ஆபத்தான வசிப்பதற்கு பொருத்தமில்லாத ஆபத்தான கட்டிடங்களில் வசித்தவர்களே வெளியேற்றப்பட்டுள்ளனர். avenue Faidherbe மற்றும் rue Galon வீதிகளில் உள்ள சில கட்டிடங்களில் வசித்த மக்களை வெளியேறும் படி Val-de-Marne மாவட்ட நிர்வாக நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியிருந்தது. இதற்காக ஜூலை 26 ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கியிருந்தது.

அதையடுத்து, அங்கு வசித்த பலர் அங்கிருந்து வெளியேறி , வேறு இடங்களுக்கு மாற்றியிருந்தனர். அதையடுத்து, அங்கிருந்து வெளியேறாமல் தொடர்ந்து வசித்த 250 பேரை இன்று காலை காவல்துறையினரின் உதவியுடன் வெளியேற்றியுள்ளனர்.

இத்தகவலை Val-de-Marne மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.