பிரான்சில் வன்முறையில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் உள்துறை அமைச்சர் சில அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,751 வெளிநாட்டவர்கள் பிரான்சில் வன்முறையில் ஈடுபட்டதாக உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார். இவர்களில் 770 வெளிநாட்டவர்கள் ‘போதைப்பொருள் கடத்தலில்’ தொடர்புடைவர்கள் எனவும், 900 பேர் ‘குடும்ப வன்முறையுடன்’ தொடர்புடையவர்கள் எனவும் உள்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் லியோன் நகரத்தில் உள்ள தொடருந்து நிலையத்தின் அருகே, மூன்று காவல்துறையினரை பல வெளிநாட்டவர்கள் இணைந்து தாக்கியிருந்தனர்.

இத்தாக்குதலை அடுத்தே உள்துறை அமைச்சர் மேற்படி தகவல்களை வெளியிட்டார்.

அதேவேளை, பிரான்சில் வன்முறையில் ஈடுபடும் ஒரு சில வெளிநாட்டவரை உடனடியாக பிரான்சில் இருந்து வெளியேற்றுவது தொடர்பாக ஒரு சட்டத்தினை இயற்ற, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கவனம் செலுத்தி வருகிறார். பிரெஞ்சு சிறைச்சாலைகளில் இடம்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை சமாளிக்கவே மக்ரோன் இதனை ஆலோசித்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.