ஐம்பது பேர் கொண்ட குழு ஒன்று மூன்று காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை மாலை 7.15 மணி அளவில் இச்சம்பவம் Lyon மாவட்டத்தின் 3 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Place Gabriel Pér பகுதியில் கொள்ளையன் ஒருவனை கைது செய்யும் முயற்சியில் மூன்று காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராவிதமாக அங்கு கூடிய பலர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.
கிட்டத்தட்ட 50 பேர் வரை கூடி காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர்.

மேற்படி தாக்குதல் சம்பவத்தை பலர் காணொளியாக படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த காணொளிகளை அடிப்படையாக கொண்டு இத்தாக்குதல் மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன