சுகாதார அனுமதி அட்டை மீண்டும் நடைமுறைக்கு வருவது தொடர்பில் அரச ஊடக பேச்சாளர் பதிலளித்துள்ளார்.

சற்று முன்னர் புதிய ஊடகப் பேச்சாளர் Olivier Veran ஊடக சந்திப்பில் கலந்துகொண்டார். அதன்போது சில முக்கிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சுகாதார அனுமதி அட்டை (pass sanitaire) நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு Olivier Veran பதிலளித்தார். “சூழ்நிலை சந்தர்ப்பமே அதைத் தீர்மானிக்கும். மீண்டும் எல்லைகளில் சுகாதார அனுமதி அட்டையினை பரிசோதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அது நடைமுறைக்கு கொண்டுவரப்படும்!” என அவர் தெரிவித்தார்.

****

பாராளுமன்ற தேர்தலின் பின்னர் இன்று பிரதமர் Elisabeth Borne தலைமையிலான அரசாங்கம் மீள மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் Elisabeth Borne தலைமையில் இன்று மாலை 4 மணி அளவில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. அதன் முடிவிலேயே மேற்படி ஊடக சந்திப்பு இடம்பெற்றிருந்தது.